உலகம்

இந்தியா போலவே அமெரிக்காவிலும் ஒரு சம்பவம்.. ஒரே நாளில் 1000 விமானங்கள் ரத்து.. என்ன காரணம்?

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தின் உச்சகட்ட பயண நேரத்தில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக, நேற்று மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டின் மிட்வெஸ்ட் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

நியூயார்க் நகரில் ஒரே இரவில் 10 அங்குலத்திற்கும் அதிகமாக பனி பொழியும் என கணிக்கப்பட்டுள்ளதோடு, வெப்பநிலை உறைநிலைக்கு கீழே சரிந்துள்ளது. ஊடகங்களின் தகவலின்படி 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் சுமார் 4,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன. குறிப்பாக நியூயார்க் மற்றும் சிகாகோ விமான நிலையங்கள் இந்த பாதிப்பில் முதலிடத்தில் உள்ளன.

தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், பனிப்புயல் வடகிழக்கு நோக்கி நகர்வதால் சாலை பயணங்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் அவசரக்கால மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைத்துள்ளார்.

இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பயணிகள் விடுமுறை முடிந்து வீடு திரும்ப முடியாமல் விமான நிலையங்களிலேயே தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த