இந்தியா

புத்தாண்டில் 500 ரூபாய் டிப்ஸ் கொடுத்த பயனர்.. உணவு டெலிவரி மனிதரின் நெகிழ்ச்சியான பதில்..!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க, உணவு விநியோக செயலிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் திளைத்திருந்த அந்த இரவில், டெலிவரி பார்ட்னர்கள் கடும் வேலையழுத்தத்திற்கு மத்தியிலும் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தனர்.

புத்தாண்டில் ஒரு பயனர் இரவு 8:30 மணியளவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 10 மணிக்கு உணவை கொண்டு வந்த பிட்டு என்ற டெலிவரி பார்ட்னர், தாமதத்திற்காக வருந்தியதோடு இன்னும் பல ஆர்டர்கள் நிலுவையில் இருப்பதாக பதற்றத்துடன் கூறியுள்ளார். எனினும், அந்த அழுத்தத்திலும் அவர் காட்டிய புன்னகையும் கண்ணியமும் வாடிக்கையாளரை நெகிழ செய்தது. அந்த இளைஞரை சற்று ஓய்வெடுக்க சொல்லி தண்ணீர் அளித்த வாடிக்கையாளர், பின்னர் அவருக்கு ரூ. 501-ஐ டிப்ஸ் ஆக கொடுத்து அனுப்பினார்.

இதற்கு அந்த டெலிவரி பார்ட்னர் அளித்த பதில் இணையவாசிகளை உருக வைத்துள்ளது. “பெட்ரோல் செலவிற்கான பணம் கிடைத்துவிட்டது” என்று அவர் மிகவும் எதார்த்தமாக பதிலளித்துள்ளார்.

பண்டிகை நாட்களில் தங்களின் சொந்த பணத்தில் பெட்ரோல் போட்டு உழைக்கும் இவர்களின் வாழ்வாதார சிக்கலை இந்த பதில் உணர்த்துகிறது. “புத்தாண்டை ஒரு சிறந்த மனிதாபிமான செயலுடன் தொடங்கியுள்ளீர்கள்” என பலரும் இந்தப் பதிவை பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்