உலகம்

600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் திடீர் மரணம்.. உறவினர்கள் சோகம்..!

உலகின் மிக அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ சிறுநீரகத் தொற்று காரணமாக காலமானார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது 32-வது வயதில் 600 கிலோ எடையுடன் இருந்தபோது இவர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் இவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாத நிலை இருந்தது; இவரை இடமாற்றம் செய்யவே எட்டுப் பேர் கொண்ட குழு தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற தீவிர உடல்நல பிரச்சனைகளுடன் போராடி வந்த அவர், 2020-இல் கரோனா பாதிப்பிலிருந்தும் மீண்டு சாதனை படைத்தார். இருப்பினும், சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான சிறுநீரகத் தொற்று சிகிச்சை பலனின்றி அவரது உயிரைப் பறித்துள்ளது.

உடல் எடையைக் குறைக்க அவர் காட்டிய மனஉறுதி பலருக்கு ஊக்கமளித்த நிலையில், அவரது திடீர் மறைவு மெக்சிகோ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த