உலகம்

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: புத்தாண்டில் உக்ரைன் அதிபர் அறிவிப்பு..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் போர், விரைவில் ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று ஆற்றிய புத்தாண்டு உரையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளத் தாம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பேசிய பின்னரே, ஜெலென்ஸ்கி இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இல்லை” என்று குறிப்பிட்ட அவர், அதே சமயம் “நாட்டின் நலனைப் பாதிக்கும் பலவீனமான ஒப்பந்தங்களில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டோம்” என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதலால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இந்த அமைதி முயற்சி உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த