சினிமா

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி – சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தை ஆகஸ்ட் மாதம் கொண்டுவரும் முயற்சியிலும் இருக்கிறார்கள். ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை சிபிச்சக்கரவர்த்திதான் இயக்க இருக்கிறார். அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்த செய்திதான் சோசியல் மீடியாவில் இரண்டு தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ரஜினி கமல் இணையும் படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. அதற்கான பூஜையும் போடப்பட்டு அந்த வீடியோவும் வெளியானது. ஆனால் பூஜை போடப்பட்டு சரியாக ஒரு வார காலத்திற்குள் சுந்தர் சி இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து பெரிய ஷாக்கை கொடுத்தார்.

அதன் பிறகு அந்தப் படத்தை எந்த இயக்குனர்கள் இயக்க போகிறார்கள் என்ற ஒரு விவாதமே நடந்தது. இருந்தாலும் மூன்று இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டன. ராம்குமார் பாலகிருஷ்ணன் பார்க்கிங் இயக்குனர், அஸ்வத் மாரிமுத்து டிராகன் பட இயக்குனர், நித்திலன் சுவாமி நாதன் மகாராஜா பட இயக்குனர் என இவர்களில் யாராவது இயக்குவார்கள் என்று சொல்லப்பட்டது.

இதில் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெயர்கள் தான் அடிக்கடி வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணனை பொருத்தவரைக்கும் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார். அந்தப் படத்தின் கதையை தான் ரஜினிக்கு சொல்லியிருக்கிறார். அது ரஜினிக்கும் பிடிக்க அந்த கதையின் என்.ஓ.சி ஆகாஷ்பாஸ்கரனிடம் இருந்தது. ஏனெனில் சிம்புவை வைத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிக்கப் போகிறார்.

ஆனால் ஆகாஷ் பாஸ்கரன், ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தால் ராஜ்கமலுடன் இணைந்து இந்தப் படத்தை நானும் தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினி தரப்பில் இதற்கு உடன்படவே இல்லை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தக் லைஃப் படத்தால் கமலுக்கு பல கோடி நஷ்டம். அதனால் அந்த நஷ்டத்தை கமல் எப்படியாவது சரி செய்ய வேண்டும். அதனால் அவரே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என ரஜினி கூறினாராம்.

அதன் பிறகுதான் அஸ்வத் மாரிமுத்து பெயர் அடிபட அந்த நேரத்தில் சிபி சக்கரவர்த்தி உள்ளே நுழைந்திருக்கிறார். சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை கமலுக்கு பிடிக்க ரஜினியிடம் பேசி இந்தப் படத்தை கூடிய சீக்கிரம் துவங்க இருப்பதாக இந்த தகவலை பாலாஜி பிரபு கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்