தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரே பரபரப்பாக பேசப்படும் செய்தி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அந்த பனிப்போர் பற்றிதான். பொங்கலுக்கு விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது.
இதை சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். விஜய்க்கு இதுதான் கடைசி படம். அதனால் சினிமாவை விட்டு அவர் போகும் பொழுது ஒரு பெரிய கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துவிட்டு போக வேண்டும் என ரசிகர்களில் இருந்து அனைவருமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதை சிவகார்த்திகேயன் தடுக்கிறார். விஜய்க்கு இணையாக நாமும் இந்த போட்டியில் களமிறங்க வேண்டும் என நினைக்கிறார். கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய துப்பாக்கியை கொடுத்த விஜய்க்கு அவர் செய்யும் நன்றி கடன் இதுதானா? என்றெல்லாம் சிவகார்த்திகேயனை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இன்றுவரை வச்சு செய்து வருகின்றனர்.
கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு சிலரோ சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து இது குறித்து ஏதாவது ஒரு ட்விட் கூட போட்டு இருக்கலாம். அதாவது விஜய் அண்ணா படமும் வருகிறது. என்னுடைய படமும் வருகிறது. இருவரும் சேர்ந்து இந்த பொங்கலுக்கு வருகிறோம்.அதனால் விஜய் அண்ணாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று ஒரு சிறிய பதிவை கூட சிவகார்த்திகேயன் கூறி இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு சிலர் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் தன்னைச் சுற்றி வந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் சிவகார்த்திகேயன். இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல் என்று ஒரே போடாக போட்டு விஜய் ரசிகர்களை அமைதிப்படுத்தி விட்டார்.
இந்த நிலையில் ரவிமோகன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஜனநாயகன் குறித்து ஒரு ட்விட் ஒன்றை போட்டு இருக்கிறார். விஜய்யை டேக் செய்து விஜய் அண்ணா நீங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டீர்கள். ஜனநாயகன் படத்தின் டிரைலர் உண்மையிலேயே அருமையாக இருக்கிறது. எல்லாருடைய இதயத்தையும் நீங்கள் வென்று விட்டீர்கள். என்னுடைய இதயமும் சேர்த்து தான்.
படத்தின் இயக்குனர் எச் வினோத் மற்றும் ஜெகதீஷ், படத்தின் தயாரிப்பு நிறுவனம் என ஒட்டுமொத்த ஜனநாயகன்பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி ஹாட் சிம்பலையும் பட்டாசு சிம்பலையும் சேர்த்து அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார் ரவி மோகன்.

