சினிமா

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

தமிழ் திரையுலகின் மைல்கல் திரைப்படமான ‘படையப்பா’ சமீபத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

25 ஆண்டுகளுக்கு பிறகும் இப்படத்திற்கு இருக்கும் மங்காத மவுசை தொடர்ந்து, இதன் வெற்றியை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர். இந்த சிறப்பு கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘படையப்பா’ மற்றும் ‘நீலாம்பரி’ மீண்டும் ஒரே சட்டகத்தில் இணைந்ததை கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினிகாந்தின் ஸ்டைலும், ரம்யா கிருஷ்ணனின் கம்பீரமும் இன்றும் குறையாமல் இருப்பதை இந்த புகைப்படம் பறைசாற்றுகிறது.

படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இவர்களின் சங்கமம், படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்