இந்தியா

10 பெண் குழந்தைகளுக்கு பின் 11வது பிறந்த ஆண் குழந்தை.. குடும்பமே கொண்டாட்டம்..!

ஆண் குழந்தை வேண்டும் என்ற தீராத ஆசையினால், வரிசையாக 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த ஹரியானா தம்பதிக்கு, தற்போது 11-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 19 ஆண்டுகளில் 11 குழந்தைகளை பெற்றுள்ள இந்த தம்பதியின் விடாமுயற்சி அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

தொடர்ச்சியாக பெண் குழந்தைகளே பிறந்ததால், பெயர்களை சூட்டுவதில் குழப்பம் அடைந்த தந்தை, தனது பல மகள்களுக்கு ‘லட்சுமி’ என்றே பெயரிட்டுள்ளார். தனது 10 மகள்களின் பெயர்களை வரிசையாகக் கூறும் அளவிற்குத் தனக்கு நினைவுத்திறன் இல்லை என்றும் அவர் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது 11-வது பிரசவத்தில் ஆண் வாரிசு பிறந்ததை அடுத்து, அந்த குடும்பமே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது. இத்தம்பதியின் மூத்த மகள் தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். “இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள தந்தை, இதுவே தனது வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்று நெகிழ்ந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்