சினிமா

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் சோலோவாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 1952-ல் வெளியான சிவாஜி கணேசனின் ‘பராசக்தி’, திராவிட அரசியலின் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் இந்தி திணிப்பு குறித்த விவாதங்கள் அலசப்படுகிறது.

பழைய வசனங்கள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் இன்றைய இளைய தலைமுறையைக் கவருமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், தமிழர்களின் மொழிப்பற்று மற்றும் சமூக நீதி குறித்த கருத்தாக்கங்கள் என்றும் அழியாதவை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், வெறும் அரசியல் முழக்கமாக மட்டும் இல்லாமல், ஒரு கலைப்படைப்பாக மக்கள் இதனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். சோலோ ரிலீஸ் என்பதால் பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய அலையை இந்தப் படம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்