இந்தியா

ஜனவரி 12-ல் பிஎஸ்எல்வி சி 62 ராக்கெட்.. இஸ்ரோவில் சூப்பர் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த செயற்கைக்கோள் உயர்தர படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது என்பதால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ கண்காணிப்பு பணிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை பெறவும் இது பெரிதும் உதவும். புவி கண்காணிப்பில் இந்தியாவின் விண்வெளித் திறனை இது அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்