உலகம்

ஆர்டர் செய்த நோக்கியா போன் 16 வருஷம் கழிச்சி டெலிவரி!… சுவாரஸ்ய தகவல்!

பொதுவாக வியாபாரத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்திடம் பொருட்கள் வாங்குவது தொடர்பாக ஆர்டர் போட்டால் ஓரிரு நாட்களில் வந்து விடும். ஆனால் லிபியாவில் ஒரு செல்போன் வியாபாரி 16 வருடங்களுக்கு முன்பு ஆர்டர் போட்ட செல்போன்கள் தற்போது டெலிவரி ஆன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2010 காலகட்டங்க்ளில் பலரும் பயன்படுத்தும் நோக்கியா செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். அதிலும் அப்போது பல மாடல்களும் இருந்தன.. இந்நிலையில், லிபியாவை சேர்ந்த ஒருவர் செல்போன் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.. அவர் ஒரு நிறுவனத்தில் நிறைய நோக்கியோ செல்போன்களை ஆர்டர் போட்டிருக்கிறார்.

ஆனால் அப்போது லிபாயாவில் உள்நாட்டு போர் துவங்கியதால் அவர் ஆர்டர் செய்த செல்போன்கள் என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.. ஆர்டர் செய்தவரும் அதை மறந்து விட்டார்.

ஆனால் அந்த செல்போன்கள் வார் ரூமில் வைக்கப்பட்டிருந்து தற்போது அதை அந்த நபருக்கு டெலிவரி செய்துள்ளனர். அதை ஓபன் செய்து பார்த்து அந்த நபர் ‘இது போன்களா? இல்லை தொல்லியல் பொருட்களா? என நக்கலடித்து அவர் அந்த பாக்சை திறக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்நாட்டுப் போர் காரணமாக செல்போன் ஆர்டர் செய்து அவை 16 வருடம் அவருக்கு கிடைத்தது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த