இந்தியா

சதத்தை நூலிழையில் மிஸ் செய்த விராத் கோஹ்லி.. இந்தியா அபார வெற்றி..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேரில் மிட்செல் அதிகபட்சமாக 84 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

301 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஜோடி 118 ரன்கள் சேர்த்து அணியை வலுப்படுத்தியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 93 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை அளித்தார்.

இருப்பினும், இறுதியில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 49 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்