கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் மூலம் இளைஞர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அவரின் திரைப்படங்களை 2கே கிட்ஸ் LCU என கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர்களுக்கு பின் ஒரு இயக்குனருக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள் என்றால் அது லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமே. அவர் விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர், லியோ இரண்டு படங்களுமே விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதேநேரம் விமர்சன ரீதியாக லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்து ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய கூலி படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்கிற விமர்சனம் வந்தது.தற்போது புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.
இந்த படத்தை மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மிகவும் அதிக பட்ஜெட்டில் இந்த படம் உருவாகும் என சொல்கிறார்கள். இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜுக்கு 75 கோடி வரை சம்பளம் பேசியிருக்கிறார்களாம். ரசிகர்கள் பல வருடமாக சொல்லி வரும் இரும்புக்கை மாயாவி கதையைத்தான் அல்லு அர்ஜுனனை வைத்து நோக்கிய செய்யப் போகிறார் என்கிறார்கள். இந்த படம் வெளிவந்தால் அட்லி போல அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் இயக்குனராக லோகேஷும் மாறுவார் எனத்தெரிகிறது.
இந்த கதையை சூர்யா, அமீர்கான் என பலருக்கும் சொல்லி கடைசியாக அல்லு அர்ஜூனை வைத்து லோகேஷ் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

