சினிமா

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்

ரஜினியின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார். அப்போது விஜய் மிகவும் சிறுவன். விஜய் சினிமாவில் வளரும் போது பாடல் காட்சிகளில் தன்னை ரஜினி ரசிகன் போல காட்டிக் கொண்டுதான் வளர்ந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் விஜயின் வளர்ச்சி ரஜினியை தாண்டி சென்றது. விஜயின் படங்கள் ரஜினி படங்களை அதிகமாக வசூல் செய்தது. அதோடு, ரஜினியை விட விஜய் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறினார்.

அந்நிலையில்தான் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா கழுகு கதையை சொல்ல விஜய் ரசிகர்களுக்கு கோபம் வந்தது. அதையடுத்து இப்போது வரை அவர்கள் ரஜினிக்கு எதிராக டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் களமாடி வருகிறார்கள்.

இந்நிலையில்தான், சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தை பார்த்துவிட்டு தன்னை போனில் அழைத்து ரஜினி பாராட்டியிருந்ததாக சிவகார்த்திகேயன் விழா ஒன்றில் கூறியிருக்கிறார். இதையடுத்து, தவெகவினரும், விஜய் ரசிகர்களும் பராசக்தி படத்தை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் சென்சார் பிரச்சனையில் சிக்கி இதுவரை ரிலீஸாகாமல் இருப்பது பற்றி எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை’ என்று பொங்குகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்