இந்தியா

1000 காளைகள்!.. 600 வீரர்கள்!. அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் இன்று மாட்டுப்பொங்கலை கொண்டாடவிருக்கிறார்கள். மாட்டுப் பொங்கல் என்றாலே மாடுகளை குளிக்க வைத்து அலங்காரம் செய்து சிறப்பான உணவுகளை ஊட்டி விவசாயிகள் மகிழ்வார்கள். ஒருபக்கம் தமிழகத்தின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கும். நேற்று உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவிருக்கிறது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலையில் 7.30 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கி வைத்தார். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் 1000 காளைகள் பங்கேற்கவிருக்கிறது. அனைத்து மாடுகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த முறை பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல்முறையாக ஸ்கோர் போர்டு அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு சுற்றிலும் எந்த வீரர் எவ்வளவு கால்களை பிடித்தார் என்கிற தகவல் டிஜிட்டல் போடும் மூலம் மக்கள் பார்க்க முடியும். பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதிகப்படியான மாடுகளை பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக 8 லட்சம் ரூபாய் கொடுக்கப்படவிருக்கிறது. அதேபோல் களத்தில் சிறப்பாக விளையாடி கவனத்தை இருக்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு 9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் கொடுக்கப்படவிருக்கிறது.

100 காளைகள் களத்தில் இறங்க 600 மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க தயாராக இருக்கிறார்கள். பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பல தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்