Donald Trump அவர்களின் வருகைக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் Canada இடையிலான எல்லைப் பிரச்சனைகளும், வர்த்தகப் போரும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. Canada வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, சுமார் 31 சதவீத கனடா மக்கள் Donald Trump எதிர்காலத்தில் கனடாவையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அல்லது ஆக்கிரமிக்க முயற்சி செய்வார் என்று நம்புகின்றனர்.
சமீபத்தில் US ராணுவம் Venezuela-வில் நுழைந்து அதன் அதிபரை கைது செய்த விவகாரம், கனடா மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 53 சதவீத கனடா மக்கள், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மற்ற நாடுகளின் இறையாண்மையை மீறும் செயல் என்றும், இது ஒரு மோசமான முன்னுதாரணம் என்றும் கருதுகின்றனர். இதனால் 37% மக்களுக்கு அமெரிக்கா மீதான நல்லெண்ணம் குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது.
இது குறித்து முன்னாள் பிரதமர் Justin Trudeau மற்றும் தற்போதைய முக்கிய தலைவர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Canada ஒரு சுதந்திரமான நாடு என்றும், அதை ஒருபோதும் 51-வது மாநிலமாக மாற்ற விடமாட்டோம் என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், Donald Trump-ன் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் Greenland போன்ற நாடுகளைக் கைப்பற்றும் எண்ணம், கனடா மக்களின் நீண்டகால அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் US கொடுத்து வரும் நெருக்கடி, இந்த ஆக்கிரமிப்பு வதந்திகளுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

