உலகம்

காசா அமைதி வாரியத்தில் சேரலனா 200 சதவீத வரி!.. பிரான்ஸை மிரட்டும் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபகாலமாகவே அதிரடியான அரசியலை செய்து வருகிறார். ஒருபக்கம் அதிரடியான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக உலக நாடுகள் பலவற்றிற்கும் அதிக அளவில் வரிகளையும் விதிப்பேன் என மிரட்டி வருகிறார். ஏற்கனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு 500 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டினார்.அதற்கு முன்பே சீனாவிற்கு பல சதவீத வரிகளை விதித்து விதித்து விளையாடினார்.

அதேபோல் நான் பல போர்களை நிறுத்தியிருக்கிறேன்.. எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக கேட்டார். ஆனால் நோபல் பரிசு அவருக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில் NATO அமைப்பிலிருந்து வெளியேறினார். ஒருபக்கம் டென்மார்க்கின் வசம் உள்ள கிரின்லாந்து நாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் இல்லையென்றால் அந்த நாட்டை ரஷ்யா அல்லது சீனா எடுத்துக் கொள்ளும் என்றும் சொல்லி வருகிறார்.

சமீபத்தில் இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி வாரியத்தை ஏற்படுத்த போவதாக அறிவித்திருந்தார். அதோடு, அதற்கு நான்தான் தலைவர் என சொல்லிக் கொண்டார். மேலும், காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

ஆனால் காசா அமைதி வாரியத்தில் இணைய மாட்டோம் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த டிரம்ப் ‘காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால் அந்நாட்டிற்கு 200 சதவீத வரி விதிப்பேன்’ என மிரட்டியிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான ஒயின் ஏற்றுமதி ஆகிறது. எனவே அமெரிக்கா அதிக வரி விதித்தால் இது பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிற நிலையில் விரைவிலேயே அதிபர் பிரான்ஸ் வாரியத்தில் சேர்ந்துவிடும் என சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த