அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கியிருந்த வேறு நாட்டவர்கள் பலரையும் வெளியேற்றினார். அதன்பின் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்து வந்த இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு அதிக அளவு வரிகளை விதித்தார். அதிலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 500 சதவீத வரியை உயர்த்தும் மசோதாவில் சமீபத்தில் கையெழுத்திட்டார்.
இதனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த சுமூக உறவும் பாதித்திருக்கிறது. ஒருபக்கம் வெனிசுலா அதிபரை கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றார். மறுப்பக்கம் ஈரான் அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். ஈரானில் அமெரிக்கா படையையும் கொண்டு சென்றார். மறுபக்கம் டென்மார்க்கில் உள்ள கிரின்லாந்து நாட்டை கைப்பற்றுவோம் இல்லையென்றால் அந்த நாட்டை சீனாவும், ரஷ்யாவும் கைப்பற்றிவிடும் என தொடர்ந்து கூறிவருகிறார்.ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து NATO அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.
இந்நிலையில், கிரீன்லாந்தை ஒப்படைக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளின் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கும் என்றும் அதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாகவும் டிரம்ப் மிரட்டி இருக்கிறார். ராணுவ படையெடுப்பு மூலம் கிரில் லந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என செய்தியர்கள் கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சையான பேச்சுக்களும் முடிவுகளும் ஐரோப்பிய நாடுகளை கலக்கமடைய வைத்திருக்கிறது.

