நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறி விக்கிரவாண்டி மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக பேசினார். தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி.. ஒரு கை பார்த்து விடுகிறேன் என்றெல்லாம் சவால் விட்டார். ஆனால், கரூர் சம்பவம் அவரை மனதளவில் பாதித்தது.
அதன்பின் அதிலிருந்து மீண்டார் விஜய். மேலும், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெசிய விஜய் திமுக ஒரு தீய சக்தி என கடுமையாக விமர்சித்தார். இது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என விஜய் சொல்லியும் இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு வரவில்லை.
ஒருபக்கம், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்பம் சென்சாரில் சிக்கி இதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்பதும் தெரியவில்லை.. ஒருபக்கம் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையில் விஜய் சிக்கியிருக்கிறார். அவரிடம் இரண்டு நாட்கள் முழுதாக சிபிஐ அதிகாரி விசாரணை நடத்தினார்கள்.
எனவே மனதளவில் விஜய் கொஞ்சம் டவுன் ஆகியிருக்கிறார். இழந்த தனது இமேஜை மீட்டெடுக்க உடனடியாக ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுருக்கிறாராம் விஜய். மீண்டும் பல ஆயிரம் மக்களை கூட்டி பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசினால்தான் இழந்த தனது இமேஜை உயர்த்த முடியும், சில கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என அவர் நினைக்கிறாராம். அநேகமாக விரைவில் சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

