சின்ன வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு.. அதேநேரம் மற்ற நடிகர் போல இவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க மாட்டார்.. நிறைய இடைவெளி விடுவார். சிம்புவுக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் தொடர்ந்து படங்களில் அவர் நடிப்பதில்லை.. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.. ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே அஜித் சென்னையில் வசிப்பதில்லை.. துபாயில்தான் இருக்கிறார்.
இந்நிலையில், துபாயில் 57 கோடி மதிப்பில் ஒரு புதிய வீட்டை சிம்பு வாங்கவுள்ளாராம். துபாய் தொழில் அதிபர் கண்ணன் ரவி இந்த வீட்டை வாங்க சிம்புவுக்கு 22 கோடி கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கண்ணன் ரவி கோலிவுட்டில் திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில்
விரைவில் இந்த வீடு சிம்புவின் கைக்கு வர இருக்கிறதாம். அனேகமாக கண்ணன் ரவியின் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் அஜித்துக்கு துபாயில் இரண்டு வீடுகள் இருக்கின்றன.. அந்த வீடுகளுக்கு அருகேதான் சிம்பு வீடு வாங்க முயற்சி செய்தாராம்.. ஆனால் அங்கு கிடைக்காததால் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம் சிம்பு.

