சினிமா

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்… மனம் திறந்த லோகேஷ்

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை மிகுந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார் லோகேஷ். அவர் எடுத்த மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என அடுத்தடுத்து ஆக்சன் படங்களில் ஒரு மாஸ் காட்டி இளைஞர்களை தன் வசப்படுத்தினார். அதிலிருந்து லோகேஷ் மீது இளைஞர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. அதே எதிர்பார்ப்புடன் லியோ மற்றும் கூலி திரைப்படங்களை ரசிகர்கள் எதிர்பார்க்க முந்தைய திரைப்படங்களை போல இந்த இருப்ப படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் ரஜினி விஜய் வழக்கம் போல வசூல் சக்கரவர்த்திகளாக இருந்து அந்த இரு படங்களின் வசூலையும் காப்பாற்றி கொடுத்தனர்.

ஆனால் விமர்சன ரீதியாக கூலி மற்றும் லியோ திரைப்படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்று கொடுத்தது. இந்த சூழ்நிலையில் ரஜினியையும் கமலையும் இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு வந்தது. இதுவும் ஒரு பெரிய ஆக்சன் படமாக தான் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென ரஜினி கமல் இணைந்து நடிக்கும் அந்தப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்ற ஒரு செய்தி வெளியானது. அதற்கு பின்னணியில் லோகேஷின் அணுகுமுறை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும் அதேபோல கூலி திரைப்படத்தின் விமர்சனமும் அதற்கு ஒரு காரணம் என்றும் ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ். இன்று திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி ஒட்டுமொத்த விமர்சனத்திற்கும் தன்னுடைய முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். கூலி திரைப்படத்திற்கு பிறகு ரஜினி கமல் ஆகிய இருவரையும் இயக்கும் வாய்ப்பு தனக்கு வந்ததாகவும் 46 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை தான் இயக்கப் போகிறேன் என்று மிகவும் எதிர்பார்த்து இருந்ததாகவும் லோகேஷ் கூறினார். அந்த நேரத்தில் கைதி 2 திரைப்படத்தை இயக்குவதாக இருந்த நான் இந்த படத்தை மிஸ் பண்ண எனக்கு விருப்பமில்லை.

அதனால் கைதி 2 திரைப்படத்தின் தயாரிப்பாளரிடம் இதைப் பற்றி பேசி ரஜினி கமல் படத்தை முடித்துவிட்டு நான் கைதி 2 திரைப்படத்தை இயக்குகிறேன் என்று வந்ததாகவும் கூறினார். ரஜினி கமல் இணையும் படத்தின் ஸ்கிரிப்ட் ஒன்றரை மாதம் எழுதினாராம். அதன் பிறகு அந்த ஸ்கிரிப்டை ரஜினி கமல் ஆகிய இருவருக்கும் தனித்தனியாக சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்களுடைய ஒரே எண்ணம் ஆக்சன் படம் வேண்டாம், லைட் வெயிட் சப்ஜெக்ட் படத்தில் தான் நடிக்க விரும்புகிறோம் என்று சொன்னதாக லோகேஷ் கூறினார்.

ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் லைட் வெயிட்டான சப்ஜெக்ட் தனக்கு எடுக்க தெரியாது என்பதால் இந்த படத்தில் இருந்து நான் விலகினேன் என இன்று ஒட்டுமொத்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் லோகேஷ். அதுமட்டுமல்ல அவருடைய தயாரிப்பில் தயாராகும் பென்ஸ் திரைப்படமும் எல் சி யு வில் தான் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்