விளையாட்டு

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது உச்சகட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் ஷிவர் ப்ரண்ட் அபாரமாக விளையாடி மகளிர் ஐபிஎல் வரலாற்றின் முதல் சதத்தை பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இந்த போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், பெங்களூர் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 57 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளின் உதவியுடன் அவர் தனது வரலாற்று சிறப்புமிக்க சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்து களத்தில் இருந்த அவரது அதிரடியால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 199 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த பெங்களூர் அணி, இறுதிவரை போராடியது. இருப்பினும், அந்த அணியால் 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட வீராங்கனை நாட் ஷிவர் ப்ரண்ட்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்