சினிமா

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

ஜனநாயகன் படம் குறித்து நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பட பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வாசலை நோக்கி பட நிறுவனமும் சென்சார் போர்டும் மாறி மாறி படையெடுத்தே வந்தன. இதற்கிடையில் சமீபத்தில் இது சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் மீண்டும் வழக்கை ஆரம்பத்தில் இருக்க விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

இதனால் ஜன நாயகன் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் வாங்குவதாக தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது. அதனால் ரிவைசிங் கமிட்டிக்கு படம் செல்லும் என்றும் தணிக்கை வாரியம் ரூல்ஸ் படி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றால் 20 நாள்கள் ஆகும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் பட நிறுவனம் வாபஸ் வாங்கி விட்டு ரிவைசிங் கமிட்டி தாமாகவே சென்றால் வேகமாக சான்றிதழ் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதனால் சான்றிதழ் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பட நிறுவனம் ஜன நாயகன் படத்தை பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸ் பண்ணலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் கேவிஎன் நிறுவனர் இன்னும் சென்னையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

சென்னையில் தமிழ் நாட்டு வினியோகஸ்தர்களிடம் அவர் கலந்தாலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஜன நாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பணத்தை திருபி கேட்கவில்லையாம். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று கேவிஎன் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்களாம். அதற்கு கேவிஎன் நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்