‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள திரைப்படம் #D55. இந்த படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்றி வரும் நிலையில், தற்போது ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு சென்றுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் இவர்களது கூட்டணி ‘ரௌடி பேபி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்றது. பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி திரையில் இணையப்போவது கோலிவுட்டின் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமியின் அழுத்தமான திரைக்கதையில் இந்த ஜோடி எப்படி ஜொலிக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

