சினிமா

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அஜித்தின் அடுத்த படம் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவது என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது.

இந்த படத்திற்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.. ஏனெனில் இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார்.. அஜித்துக்கு உள்ள வியாபாரம் மற்றும் தற்போதுள்ள சினிமா வியாபாரம் எல்லாவற்றையும் கணக்கு போட்ட தயாரிப்பாளர்கள் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என சொல்கிறார்கள்..

விஜய்க்கு போட்டி நடிகராகா கருதப்பட்டார் அஜித். மேலும், விஜய் என்ன சம்பளம் வாங்குகிறார் என்பதை பார்த்து அதற்கு ஏற்ப அஜித்தும் சம்பளம் வாங்கினார்.. குறிப்பாக அதற்கேற்ப சம்பளத்தை உயர்த்தினார் அஜித்.. ஆனால், விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார்.

விடாமுயற்சி படத்துக்கு அஜித் வாங்கியது 100 கோடி சம்பளம்தான்.. குட் பேட் அக்லிக்கு 110 கோடி வாங்கியதாக சொல்லப்படுகிறது.. திடீரென தனது சம்பளத்தில் 75 கோடி உயர்த்தி விட்டார் அஜித். எனவே இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து ‘விஜய் இருந்தவரைக்கும்தான் அஜித்துக்கு மவுசு.. தற்போது அவன் படத்தை தயாரிக்க ஆளே கிடைக்கவில்லை’ என சினிமா வட்டாரத்தில் தொடங்கி விட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்