சினிமா

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் மற்றும் பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும், வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று ரகசியமாக திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டதை தொடர்ந்து எழுந்த இந்த காதல் கிசுகிசு, இப்போது திருமணப் பேச்சு வரை வந்துள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் குறித்து பேசிய மிருணாள், “காதல் ஒரு மனிதனை சிறந்தவராக மாற்றும்; அது உலகின் மிக அழகான உணர்வு” என்று உருக்கமாக தெரிவித்தார்.

மேலும், தனுஷின் சகோதரிகளை மிருணாள் சமூக வலைதளங்களில் பின்தொடர தொடங்கியது இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

தனுஷ் ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மணந்து, 2022-ல் விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர். ரகுமான் இசையில் மிருணாள் நடித்துள்ள ‘பீகி பீகி’ பாடல் வெளியீட்டு விழாவில் இது குறித்த கேள்விகள் எழுந்தபோதும், இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இருப்பினும், திரையுலகில் இவர்களது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்