விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது.

எந்தவொரு வலுவான காரணமும் இன்றி இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானுக்கு, நடப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட தடை விதிப்பது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை காட்டவே பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறாமல் போனால், ஐசிசி-க்கு சுமார் 4500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

அடிப்படை முகாந்திரம் ஏதுமின்றி விளையாட்டை புறக்கணிப்பதை ஏற்க முடியாது என ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் இந்த பிடிவாதம் அந்த அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்தே வெளியேற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது, இது சர்வதேச கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்