சினிமா

நிறைய வசனங்களை அஜித் தூக்கிட்டார்!.. கௌதம் மேனன் பேட்டி!

நடிகர்களில் அஜித் கொஞ்சம் வித்தியாசமானவர். தான் நடிக்கும் படங்களில் தன்னை புகழ்வது போல காட்சிகளையோ, வசனங்களையோ வைக்க அனுமதிக்கமாட்டார். மிகவும் அரிதாகவே அப்படி காட்சிகள் அவரின் படங்களில் இடம்பெறும். பில்லா மங்காத்தா போன்ற திரைப்படங்கள் அஜித்தை மாஸ் நடிகராக மாற்றியது.

ஆனாலும் தான் ஒரு மாஸ் நடிகர் என்கிற இமேஜை அஜித் தனது தலையில் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தனது ரசிகர் மன்றங்களே அவர் கலைத்தார்

.விடாமுயற்சி படம் உருவானபோது கூட அந்த படத்தில் சில காட்சிகளில் பன்ச் வசனங்களை வைக்க அந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி விரும்பினார் ஆனால் அது அஜித் அதை தடுத்துவிட்டார்..

இந்நிலையில்தான் அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை இயக்கிய கௌதம் மேனன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘என்னை அறிந்தால் படம் பண்ணும் போது அஜித் சார் சீன் பேப்பரை வாங்கி படிச்சு பாத்துட்டு டயலாக் எல்லாம் ரொம்ப மாஸா இருக்கு.. நீ உன்னோட படங்களுக்கு எப்படி எழுத மாட்டியே?.. நீ எனக்காகதான் இப்படி எழுதி இருக்கே’ன்னு சொல்லி எல்லா வசனங்களையும் தூக்கிட்டார்..

அந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி என்பதால் அந்த வசனங்களை பேசிருந்தால் ரொம்பவே நல்லாவே இருந்திருக்கும். ஆனால் அஜித் அதை விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்.

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியானாலும் தயாரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை. அஜித் அதிக சம்பளம் கேட்பதால் இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்