சினிமா

ஜனநாயகன் வழக்கு வாபஸ்!.. மறுதணிக்கைக்கு போனது படம்!

விஜய் நடித்திருக்கும் திரைப்படத்தை, கடந்த மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் வெளியாகவில்லை. பட ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியான தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா படத்திற்கு தணிக்கை சான்றிதழை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. எனவே தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்திற்கு போனார். ஆனால் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கட்டும் என அவர்கள் சொல்லிவிட்டனர். எனவே, படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், ஜனநாயகன் படம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு அனைத்தையும் திரும்ப பெறுவதாக பட தயாரிப்பு நிறுவனம் இன்று நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது. படம் மறுத்தணிக்கை குழுவிற்கு அனுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே மேலும் சில அதிகாரிகள் படத்தை பார்ப்பார்கள். அவர்கள் சொல்லும் மாறுதல்களை செய்து விட்டால் படம் உடனடியாக வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்