இந்தியா

அன்புமணிக்கே பாமக!.. உறுதி செய்த தேர்தல் ஆணையம்!. ராமதாஸ் அதிர்ச்சி

சில மாதங்களுக்கு முன்பு பாமக மேடையிலேயே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்தது. உறவினர் ஒருவருக்கு ராமதாஸ் முக்கிய பொறுப்பை கொடுக்க அந்த மேடையிலேயே அன்புமணி தனது எதிர்ப்பை காட்டினார். அதன்பின் அந்த மோதல் வலுப்பெற்று ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பிரிந்தனர். தற்போது பாமக இரண்டு அணியாக பிரிந்துவிட்டது. ஒருபக்கம், அன்புமணியை பற்றி பல பரபரப்பு புகார்களை செய்தியாளரிடம் கூறினார் ராமதாஸ்..

அன்புமணிக்கு தலைமை பொறுப்பில்லை, நிர்வாகிகளை வழிநடத்தி செல்லும் பக்குவம் இல்லை, அவன் என் முதுகில் குத்து விட்டான், அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது நான் செய்த மிகப்பெரிய தவறு, தாயை அடிக்க வந்தான் என்றெல்லாம் பரபரப்பு புகார்களை கொடுத்தார் ராமதாஸ். ஒருபக்கம் பாமகவுக்கு நான்தான் தலைவர்.. அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்..

இந்நிலையில்தான், பாமகவின் தலைவர் அன்புமணிதான் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறது. 2026 வரை அன்புமணியின் பதவிக்காலம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த மறு ஆய்வு விசாரணையில் தெளிவுபடுத்தி உள்ளது.

இது ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒருபக்கம் அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து விட்டது.

ராமதாஸ் தலைமையிலான பாமக திமுகவுக்கு செல்ல விடுதலைச் சிறுத்தைகள் தடையாக இருப்பதால் இதுவரை எந்த கூட்டணியிலும் சேராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்