விளையாட்டு

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று தந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான் கான், தற்போது சிறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளிவரும் செய்திகள் சர்வதேச கிரிக்கெட் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல் உட்பட 14 சர்வதேச முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிற்கு ஒரு கூட்டு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.

அரசியலை கடந்து, ஒரு விளையாட்டு வீரராகவும் மனிதநேய அடிப்படையிலும் இம்ரான்கானுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையும், கண்ணியமான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, சிறையில் அவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் கவலையளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “மைதானத்தில் நிலவும் போட்டி மனப்பான்மை ஸ்டம்புகள் பிடுங்கப்பட்டதும் முடிந்துவிடும், ஆனால் மரியாதை என்றும் நிலைக்கும்” என்று அந்த அறிக்கையில் அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்