தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ஆகியோர் தொழில் முனையில் போட்டியாளர்களாக காட்டப்பட்டாலும் நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் ஒரு ஆகச் சிறந்த நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்தே இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவானது.
அதன் பிறகு இருவருக்குமான மார்க்கெட் பெரிய அளவில் உயர அவர்களைச் சார்ந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் இருவரை பொறுத்த வரைக்கும் ஒருவரை ஒருவர் நண்பர் என்றே தான் குறிப்பிடுவார்கள். அதாவது விஜயின் அரசியல் வருகைக்கும் அவருடைய வளர்ச்சிக்கும் வாழ்த்துக்களை அஜித்து சமீபத்திய பேட்டிகளில் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் நான் எப்போதும் விஜய்க்கு நல்லதே நடக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். விஜயும் தனது படத்தின் ஆடியோ லாஞ்சுகளில் நண்பர் அஜித் என பலமுறை குறிப்பிட்டு இருக்கிறார். ஆரம்ப காலங்களில் இவர்கள் இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசுவதுண்டு. அஜித் வீட்டிற்கு விஜயும் விஜய் வீட்டிற்கு அஜித்தும் சென்றிருக்கிறார்கள்.
இவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் அஜித் நட்பை குறித்து சமீபத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் ஷாலினி, அவர்களுக்கு இடையில் ஒரு ஆரோக்கியமான உறவு இருக்கிறது. இருவருமே ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மகிழ்வார்கள். அது மிகவும் அழகானது என பேசியுள்ளார்.

