உலகம்

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!.. இந்தியாவுக்கு போட்ட வரியை குறைச்ச டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அதிகளவில் வரிகளை விதித்து வருகிறார். அதிலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவை கண்டித்து வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். அதன் பின் சமீபத்தில் பிரதமர் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 25 சதவீத கூடுதல் வரியை நீக்கியதோடு 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைத்தார்.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் டொனால்ட் ட்ரம்ப் அதிக அளவு வரி விதித்திருப்பதை அமெரிக்க உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.. மேலும் அவர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமலேயே அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் என்று தலையில் குட்டியிருக்கிறது.

இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் விதித்த வரிகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியா மீதான இறக்குமதி வரியை 18 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்து அறிவித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க வர்த்தக விரிவாக்க சட்டத்தின் கீழ் டிரம்ப் இன்று புதிதாக விதித்த 10 சதவீத வரி இந்தியா, ஜப்பான உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருந்தும் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த