பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.
பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தற்கொலை படை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளே காரணம் என்று இஸ்லாமாபாத் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக ரமலான் மாத தொடக்கத்தில் இஸ்லாமாபாத் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
2021-ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது முதல் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை போர் மற்றும் பயங்கரவாதம் குறித்த மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

