தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியான ஒரு அந்தஸ்தை பெற்றிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஆனால் இப்போது இருவருமே வேறொரு பாதையை தேர்ந்தெடுத்து அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயை பொறுத்தவரைக்கும் அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். இனிமே படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் விஜய் கூறிவிட்டார். ஜன நாயகன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்றும் கூறினார்.
இன்னொரு பக்கம் அஜித் கார் ரேஸில் பயங்கர பிஸியாக இருக்கிறார். அது முடிந்த பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அஜித் ஆதிக் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் அதே கூட்டணி எனும் போது அந்தப் படத்திற்கான ஹைப் கூடியிருப்பதாகவே தெரிகிறது.
சமீபகாலமாக தன்னுடைய ரசிகர்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விஜயை விட அஜித் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதோடு தன்னுடைய ரசிகர்களை எந்தளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் பார்த்திபன் கூட அஜித் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் ரேஸில் ரசிகர்கள் ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தனர். உடனே அஜித் அவர்களிடம் என்னுடைய ரசிகர்கள் கண்ணியமானவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள் என கூறியிருக்கிறேன். அதனால் அதற்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னதும் ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர். அதே போல் சமீபத்தில் கூட அஜித்தை பார்த்ததும் அனைவரும் ஹாய் சொன்னார்கள்.
இவரும் ஹாய் சொன்னார். ஒரு சில பேர் விசில் அடித்தனர். உடனே அஜித் கை சைகையால் அதை வெறுத்ததுடன் கூடாது என்று சொன்னதும் அதையும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள், சூப்பர்ஸ்டார்கள் மக்கள் முட்டாளாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். உடனே ரெங்கராஜ் பாண்டே குறுக்கிட்டு விஜயும் அப்படித்தான் நினைக்கிறாரா என்று கேட்டதற்கு ‘ஹ்ம்ம் ஆமா.. சூப்பர் ஸ்டார்கள் மக்கள் முட்டாளா இருக்கத்தான் விரும்புகிறார்கள்’ என்று கூறினார்.

