பிப்ரவரி மாதம் அஜித் ஆதிக் இணையும் படத்தின் படப்பிடிப்பது துவங்கும் என அஜித் தரப்பிலிருந்தும் ஆதிக் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியானது. ஆனால் பிப்ரவரி மாதம் முடியும் நிலையிலும் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இன்றுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே அஜித் ஆதிக் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. குட் பேட் அக்லி படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்கவில்லை .அப்படி இருக்கும் பொழுது மறுபடியும் அதே கூட்டணி என்பதால் இந்த படத்திற்கு பெரிய ஹைப் இப்போதிலிருந்து இருந்து வருகிறது.
ஒரு பக்கம் கார் ரேசில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித் பிப்ரவரி மாதத்தில் இருந்து புதிய படத்தின் படப்பிடிப்பில் இருப்பார் என சொல்லப்பட்டது .ஆனால் இன்று வரை அவர் துபாயில் தான் இருக்கிறார். என்னாச்சு என விசாரிக்கும் பொழுது ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்ட கதைதான். அஜித் கேட்கும் சம்பளம் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த படத்தை தயாரிக்க தயங்குகிறார்கள்.
இதற்கிடையில் பென் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக முன் வந்தது. ஆனால் அந்த நிறுவனமும் இப்போது இந்த படத்தில் இருந்து பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இன்னொரு பக்கம் அஜித் படத்தின் வியாபாரம் என்பதும் தயாரிப்பு நிறுவனங்களை யோசிக்க வைக்கிறது. அவருடைய படத்தின் வியாபாரம் 225 கோடி தான்.
ஆனால் அவர் கேட்கும் சம்பளம் 180 கோடி வரை என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும் பொழுது எப்படி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியும் என்பதனாலேயே தயாரிப்பு நிறுவனங்கள் பின்வாங்குகின்றன. தெலுங்கு பட நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்க விரும்புவதாக சொல்லப்பட்டது. ஆனால் அஜித்தின் மார்க்கெட் அந்த அளவுக்கு இல்லை என்பதால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க எந்த நிறுவனமும் முன்வர தயங்குகிறார்கள். அதனால் அஜித் ஆதிக் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது இப்போது சந்தேகமாகவே இருக்கின்றது.

