சினிமா

கும்பல்ல ஒருத்தரா நின்னுக்கிட்டு இருந்தார் சூரி!.. ஆர்.ஜே.பாலாஜி சொன்ன பிளாஷ்பேக்!

சினிமா ஆசையில் சென்னை வந்து சாப்பாட்டுக்காக பல வேலைகளை செய்து தமிழ் சினிமாவில் போராடி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர்தான் சூரி. மதுரையை சேர்ந்த சூரி சென்னை வந்து பெயிண்ட் அடிப்பது, சுண்ணாம்பு அடிப்பது என்பது உள்ளிட்ட பல வேலைகளையும் செய்திருக்கிறார்.. மேலும் சினிமா சூட்டிங் நடக்கும் இடங்களிலும் பல எடுபிடி வேலைகளையும் செய்து வந்தார். பல திரைப்படங்களில் ஒரு காட்சியில் கூட்டத்தில் நிற்கும் ஒருவராகவும் சூரி நடித்திருக்கிறார்.

அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக மாறினார். இந்த இரண்டு படங்களுக்கு முன்பு அவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தார்..

விடுதலை திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சூரி என்னுடைய நண்பர்தான்.. 1999ம் வருடம் சங்கமம் படம் வெளியான போது ஒரு சீன்ல 100 பேர் நின்னுட்டு இருப்பாங்க.. அதுல ஒருத்தரா சூரி நின்றுகொண்டிருப்பார். ஆனால் அவர் ஹீரோவா மாறுவதற்கு 25 வருஷம் ஆயிடுச்சு.. அதனால யாருக்கு எது வேணாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கும்.. எனக்கும் நடக்கலாம்.. அது உங்களுக்கும் நடக்கலாம்’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்