டி20 உலகக்கோப்பை சூப்பர் ஹிட் சுற்றில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்தது. 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்த ஹெட்மாயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதே பிரிவில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகளின் இந்த அதிரடி ஆட்டம் மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

