சினிமா

தீபாவளிக்கு சிம்பு கொடுக்கும் டபுள் ட்ரீட் – வெளியாகும் அரசன் வீடியோ

தக் லைப் திரைப்படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இடையில், சிம்பு சில படங்களை கமிட் செய்தும் அது டேக் ஆப் ஆகாமல் போய்விட்டது. எனவே வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்கிற திரைப்படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் தற்போது வரை முடிந்தபாடில்லை. பொதுவாக வெற்றிமாறன் ஒரு திரைப்படத்தை திட்டமிட்டபடி முடிக்க மாட்டார். விடுதலை படத்தையெல்லாம் ஒன்றை வருடங்களுக்கு மேல் எடுத்தார். தற்போது சிம்புவை வைத்து அரசன் மற்றும் கென் கருணாசை வைத்து ராஜன் வகையறா ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் அவர் இயக்கி வருவதால் தாமதம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அரசன் திரைப்படத்திலிருந்து சுமார் 8 நிமிட பிரத்யோக காட்சிகள் தீபாவளியன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் முக்கிய காட்சிகள் இடம் பெறலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதோடு Dude பட இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தீபாவளியன்று வெளியாகும் என்கிறார்கள். எனவே இந்த தீபாவளியை பொறுத்தவரை சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்