2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்று முக ஸ்டாலின் உறுதியாக நம்பினார்.
ஆனால், நடிகர் விஜயின் அரசியல் வரவு திமுகவை ஆட்டம் காண வைத்தது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சியமைத்து முதலமைச்சர் ஆகிவிட்டார். இப்படி ஒரு திருப்பத்தை ஸ்டாலினை எதிர்பார்க்கவில்லை. அதைவிட அதிர்ச்சியாக சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முக ஸ்டாலின் தோல்வியடைந்தார். அதுவும் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தார்..
அதிமுக எம்.எல்.ஏக்கள் 7 பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்ததால் ஏழு தொகுதிகள் காலியாக இருந்தது. அதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக முதலிடத்தையும், திமுக இரண்டாம் இடத்தையும் பெற்றது. அந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக பெற்ற வாக்குகள் திமுகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் முக ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி ‘அதிமுக வலுவாக இருக்கும் தாராபுரத்திலேயே அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் 2ம் இடத்திற்கு வந்து விட்டோம்.. நமக்கும், தவெகவுக்கும் வித்தியாசம் 9 ஆயிரம் வாக்குகள் மட்டுமே. நீங்கள் கருர் தொகுதியில் நில்லுங்கள். நான் உங்களை வெற்றி பெற வைக்கிறேன்.. நீங்கள் போட்டியிட்டால் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள்.. ‘அப்பாவை காணோம்’னு கேட்டவங்களுக்கு அப்பா சட்டசபைக்கு வந்து விட்டார் என காட்டுவோம் என்று பேசினாராம்.. அவர் பேசியதை ஸ்டாலின் அமைதியாக கேட்டுக் கொண்டாராம்.

