உலகம்

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்தது.. ஆனால்!.. பில்கேட்ஸ் அதிர்ச்சி

கடந்த பல நாட்களாகவே எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான பல புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலக நாடுகளிடம் பரபரப்பை எற்படுத்தி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் 30 வருடங்களுக்கு முன்பு இரண்டு பெரிய தீவுகளை வாங்கி அங்கே சிறுமிகளை வரவழைத்து பெரும் பணக்காரர்கள் உல்லாசமாக இருக்க உதவி செய்தார் என சொல்லப்படுகிறது.

இவருடன் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகப் பணக்காரார்களில் ஒருவரான பில் கேட்ஸ், மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் என பலரும் தொடர்பில் இருந்தனர். எப்ஸ்டீன் பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் அறையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்நிலையில், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்கிற பெயரில் எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது தொடர்பாக விளக்கமளித்த டொனால்ட் டிரம்ப் எனக்கும் எப்ஸ்டீனுக்கும் இருந்த தொடர்பு எப்போதே முறிந்துவிட்டது என்று சொன்னர். அதேபோல், இதுபற்றி விளக்கமளித்த பில்கேட்ஸ் ‘‘எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்துக்கொண்டதற்காக வருத்தப்படுகிறேன். அவருடன் பேசியிருக்கிறேன். ஆனால், தீவுக்கு சென்றதில்லை’ என கூறியிருந்தார்.

அதன்பின் ஹெலிகாப்டரில் எப்ஸ்டீன் மற்றும் பில்கேட்ஸ் அமர்ந்திருக்க அருகே இரண்டு ரஷ்ய பெண்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இது தொடர்பாக விளக்கமளித்த பில்கேட்ஸ் ‘அந்த இரு பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஆனால், குற்றச்செயல்கள் எதுவும் நடக்கவில்லை. எப்ஸ்டீனுடன் பழகியது மிகப்பெரிய தவறு. எனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனாலும், எந்த குற்றத்திலும் என்னுடைய பங்கு இல்லை’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த