80களில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன். குறிப்பாக ரயில் பயணங்களில், குங்குமச்சிமிழ், வைதேகி காத்திருந்தாள், மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா என்பது உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி கொடுத்த ஆர் சுந்தர்ராஜன் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் மீது புகார் சொல்லியிருக்கிறார். நானும் பாக்கியராஜும் சினிமா தேடி சென்னை வந்து ஒன்றாக தங்கியிருந்தோம்.. அப்போது பாரதிராஜாவுக்கு ஒரு உதவி இயக்குனர் தேவைப்பட நான் பாக்யராஜிடம் ‘நீ போ’ என சொன்னேன். ஏனெனில் அவனுக்கு அப்போது கொஞ்சம் ஆங்கிலம் தெரியும்.. என்னிடம் ‘நான் போக மாட்டேன்’ என்று சொன்னவன் காலையிலிருந்து பார்த்தால் அவரிடம் போய் சேர்ந்துவிட்டான்.. என்னிடம் சொல்லாமல் போனதில் எனக்கு வருத்தம் உண்டு.
அதன்பின் ஒருநாள் நான் மவுண்ட் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது பாக்யராஜ் பென்ஸ் காரில் வந்தான்.. ‘என்னை தேனாம்பேட்டையில் இறக்கி விடு’ என கேட்டேன்.. அவன் முடியாது என்றான்.. கோபம் வந்து கல் எடுத்து அவனை அடிக்கப்போனேன்.
பென்ஸ் கார் வாங்கியது அவன் சினிமாவில் அடைந்த வளர்ச்சிதான் என்றாலும் ஒருவருக்கு துரோகம் செய்யக்கூடாது.. அந்த வருத்தம் எனக்கு உண்டு’ என பேசியிருக்கிறார்.

