இந்தியா

திமுக – காங்கிரஸ் கூட்டணி நல்லா போகுது!.. பதறிய செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.. ஏனெனில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, 40 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா சீட் என பல டிமாண்ட்களை காங்கிரஸ் முன் வைத்திருக்கிறது. ஆனால் இது எதையுமே கொடுக்க திமுக மறுக்கிறது.. 20 முதல் 25 தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும்.. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

எனவே விஜயின் தமிழக வெற்றி கழகத்திடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக இன்று காலை முதலே செய்திகள் வெளியாகி வருகிறது.. அதுவும் டெல்லியில் இருந்து காங்கிரஸ் பிரமுகர்கள் விஜயிடம் பேசுவதாகவும் செய்திகள் கசிந்தது. குறிப்பாக சமீபத்தில் சென்னை வந்த கிரிஷ் சோடங்கர் தவெகவும் எங்களுடன் பேசி வருகிறார்கள் எனக் கூறியிருந்தார்.

ஒருபக்கம், தொகுதி பங்கட்டில் உடன்பாடு ஏற்படாததால்தான் இதுவரை திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என சொல்லப்படுகிறது.. இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ‘தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மட்டுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.. வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை.. திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாகத்தான் இருக்கிறது.. கிரிஷ் சோடங்கர் சொன்னது அவரின் சொந்த கருத்து.. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல’ என கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்