செயற்கை நுண்ணறிவு துறையில் உலகப்புகழ்பெற்ற OpenAI நிறுவனம், தனது AI மாடல்களை ராணுவ சேவைகளுடன் இணைப்பதற்காக அமெரிக்க அரசுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஒருபுறம் இருக்க, மற்றொரு முக்கிய AI நிறுவனமான Anthropic, தனது ‘Claude AI’ மாடலை அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு முழுமையாக வழங்க அனுமதி மறுத்துவிட்டது.
இதன் விளைவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நவீன கால போர்களில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் இந்த அதிரடி நகர்வுகள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்கள் ராணுவ திட்டங்களில் ஈடுபடுவது குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

