உலகம்

உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மரணம்: போரை தொடருமா ஈரான்?

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இஸ்ரேலுடன் இணைந்து நடத்தப்பட்ட அதிநவீன வான்வழி தாக்குதலில், டெஹ்ரானில் உள்ள கமேனியின் அலுவலகம் மற்றும் ரகசிய தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் கமேனியுடன் சேர்ந்து ஈரானின் பாதுகாப்பு அமைச்சரும், புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதிகளும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரலாற்றின் மிக மோசமான ஒரு சர்வாதிகாரி வீழ்ந்துவிட்டார், இது ஈரான் மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அரசு ஊடகங்கள் முதலில் இதனை மறுத்தாலும், பின்னர் உறுதிப்படுத்தின. 1989 முதல் ஈரானை வழிநடத்தி வந்த கமேனியின் மறைவு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் ஏவுகணை தளங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த