சினிமா

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் ஏற்கனவே வைரலான நிலையில், தற்போது பிப்ரவரி 24-ல் நடைபெற்ற ‘சங்கீத்’ விழாவின் புகைப்படங்களை இந்த ஜோடி பகிர்ந்துள்ளது. “சிரித்துச் சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு இது” என விஜய் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவை தூக்கி சுற்றுவதும், இருவரும் மேடையில் காதல் பொங்க நடனமாடுவதும் போன்ற புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

புகழ்பெற்ற ஃபால்குனி ஷேன் பீகாக் வடிவமைத்த உடையில் இருவரும் தேவதூதர்கள் போல் ஜொலித்தனர். ராஷ்மிகா தனது மைத்துனர் ஆனந்த் தேவரகொண்டாவுடன் நடனமாடும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பொதுமக்களின் அதீத ஆர்வத்தை கருத்தில்கொண்டு, பலத்த பாதுகாப்புடன் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்