சினிமா

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தாய் சுமன் மந்தனா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பழைய நேர்காணலின் ஆடியோ கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி இடையிலான முறிந்த நிச்சயதார்த்தம் குறித்து சுமன் மந்தனா அந்த நேர்காணலில் பேசியிருந்தார். பிப்ரவரி 26 அன்று விஜய் தேவரகொண்டாவுடனான ராஷ்மிகாவின் திருமணத்திற்கு பிறகு, இந்த பழைய ஆடியோ திட்டமிட்டே பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த ஆடியோவில், ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகாவின் திரையுலக முடிவுகளை கட்டுப்படுத்த முயன்றதாகவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிடுவதாக ராஷ்மிகாவை அறிவிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் சுமன் மந்தனா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, “கடந்த எட்டு ஆண்டுகளாக என் மீது நடத்தப்படும் அவதூறு பிரசாரங்களின் ஒரு பகுதியாக இது உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட உரையாடலை அனுமதியின்றி வெளியிடுவது அநாகரிகமானது,” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீடியோவை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ஊடகங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்