கடந்த 2 வாரங்களுக்கும் மேல் ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என அந்த 2 நாடுகளும் கருதுகிறது. ஒருபக்கம் அமெரிக்காவின் ராணுவ தடவாளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈராக் தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய்களை கொண்டுவரும் கப்பல்கள் ஈரானின் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது.
ஆனால் ஹோர்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது. அதோடு, அந்த பகுதியில் வரும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்துவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட ஒரு அமெரிக்கா எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கி அழித்தது. ஈரானின் கெடுபிடியால் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கேஸ் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.. ஒருபக்கம், எரிபொருள் விலையும் உயர்ந்திருக்கிறது.
இதற்கிடையில், ஈரானின் முக்கிய தீவு நகரமான கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பகுதி ஈரானின் முக்கிய பகுதியாகும். ஈரானின் இதயம் போன்றது. ஏனெனில், ஈரான் நாட்டின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி இந்த கார்க் தீவில்தான் நடக்கிறது.
இந்நிலையில், கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் சாம்பலாக்கிவிடுவோம் என ஈரான் இராணுவம் எச்சரித்திருக்கிறது.

