இந்தியா

ஏப்ரல் 20ம் தேதி விவகாரத்து கேஸ்!.. 23ம் தேதி தேர்தல்!.. விஜய்க்கு பெரிய சவால்!

நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சியை துவங்கினாரோ அப்போது முதலே பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். அரசியலில் வெற்றி பெறுவது, அரசியல் நீடிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை என்பது விஜய்க்கு புரிந்திருக்கிறது. மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கருத்துக்கு சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர்.. அது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை டெல்லிக்கு சென்று சிபிஐ விசாரணையில் ஆஜரானார். மேலும் நேற்று டெல்லி சென்று இன்று காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.

ஒருபக்கம் தவெகவுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.. மறுபக்கம், அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டுடு நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.. அதோடு, விஜய்க்கு ஒரு நடிகையோடு தொடர்பு இருப்பதாக சொல்லி விஜயின் இமேஜை டேமேஜ் செய்திருக்கிறார்.

அது நடந்து சில நாட்களிலேயே திரிஷாவை கூட்டிக்கொண்டு விஜய் திருமணத்திற்கு போனதும் சர்ச்சையானது.. இதற்கிடையில்தான் தேர்தலை சந்திக்கவிருக்கிறார் விஜய்.. ஏப்ரல் 20ம் தேதி விவாகரத்து வழக்கு தொடர்பாக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் நடக்கவிருக்கிறது.

இதையெல்லாம் சமாளித்து விஜய் மக்களிடம் வாக்குகள் வாங்க வேண்டும் என்பதுதான் அவருக்கு முன்னே இருக்கும் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்