விளையாட்டு

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.. மும்பை அணியின் ஆப்கானிஸ்தான் வீரர் வேண்டுகோள்..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் வான்வழித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனை பலத்த சேதமடைந்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபர் சர்வதேச சமூகத்திற்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சிகிச்சைக்கே பணமில்லாத அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆப்கானிஸ்தானின் வரலாற்றை அனைவரும் அறிவர்; அது மீண்டும் திரும்பினால் பாகிஸ்தானுக்கு அது நல்லதல்ல” என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய மோதல்களை தவிர்க்கவும் அமைதியை நிலைநாட்டவும் இந்தியா உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள கசன்ஃபர், வன்முறை யாருக்கும் நன்மையை தராது என்றும் போர்ச்சூழலால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், எல்லையில் நிலவும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை உண்டாக்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்